உலக பணக்காரர் பட்டியல் - பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்

வெள்ளி, 28 ஜூலை 2017 (09:43 IST)
உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


 

 
உலகின் பணக்காரர் பட்டியலில் கடந்த 23 வருடங்களாக முதலிடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ்.  தற்போது அந்த இடத்தை ஜெப் பேசாஸ் கைப்பற்றியுள்ளார்.
 
அதாவது, அமேசான்.காம் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியனாக இருப்பதால் அவர் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார்.
 
இந்த தகவலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 81 மில்லியன் பங்குகளிகள் கிட்டத்தட்ட 17 சதவீத பங்குகளை ஜெப் பேசாஸ் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்