கடற்படையினர் டிக்டாக் பயன்படுத்த தடை! – உஷாரான அமெரிக்கா

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (09:19 IST)
அமெரிக்க கடற்படை வீரர்கள் டிக்டாக் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் ஃபேஸ்புக்கிற்கு பிறகு அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது டிக்டாக் செயலி. அமெரிக்க கடற்படையில் உள்ள வீரர்களும் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவை மையமாக கொண்ட டிக்டாக் செயலி பாதுகாப்பற்றது என்று அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க கடற்படை வீரர்கள் டிக்டாக் பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என எச்சரிக்கையடைந்த அமெரிக்க அரசு கடற்படை வீரர்களுக்கு அளித்துள்ள செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்துள்ளது. முன்னதாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்