நீங்க மேயராகணும்: உதயநிதியிடம் நெகிழ்ச்சியுடன் கூறிய 84 வயது தாத்தா!

புதன், 25 டிசம்பர் 2019 (08:45 IST)
நேற்று முன்தினம் சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பேரணியில் 84 வயது திமுக தொண்டர் ஒருவர் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த முதியவரை தனது இல்லத்திற்கு வரவழைத்து அவருக்கு நினைவுப் பரிசு கொடுத்து வாழ்த்தி பாராட்டி அனுப்பி வைத்தார் 
 
இந்த நிலையில் 84 வயது திமுக தொண்டர் நாராயணப்பா என்ற தாத்தாவை நேற்று உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற  ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். 'ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துலதான் இருக்கேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்' என்றார். 'உங்களை பார்த்ததுல எனக்குத்தான் பெருமை' என்றேன்.
 
'உங்க எல்லா படங்களையும்  பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். 'நான்  மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க' என்று  செல்லமாகக் கோபப்பட்டவர், 'அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்' என்றார்
 
எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்' என்றவரிடம், 'உங்களுக்கு என்னங்கய்யா வேணும்' என்றேன். 'ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி  என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.  இந்த பிணைப்புதான் திமுக.
 
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்