இதையடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நூதனமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவி பேட்ஸ்மிதா சவுத்ரி மேடையில் ’தான் குடியுரிமை திருத்த சட்டத்தையும் என் ஆர் சி யையும் எதிர்ப்பதாகவும், அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது’ எனவும் மேடையில் அறிவித்தார். மேலும் தன் வசமிருந்த குடியுரிமை திருத்த சட்ட நகலை மேடையிலேயே கிழித்துவிட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிவிட்டு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.