ரஷிய ராணுவத்தினரின் கட்டுப்பாட்டியில் இருந்த ஆயுத கிடங்கை தகர்த்துள்ளது உக்ரைன் ராணுவம்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இப்போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து வருகிறது.
உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி மட்டும் ஆயுத உதவி செய்து வருகிறது. இதனால், ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டில், ரஷியா ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் மகிவ்கா நகரில் இருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ரணுவம் தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுபற்றி உக்ரைன் ராணுவம் கூறியதாவது; தங்கள் படையினரின் துல்லியமான தாக்குதலால், ரஷிய பயங்கரவாதிகள்செய்த செய்த ஆக்ரமிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறினர்.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் பலியானதாகவும் ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.