பராக் ஒபாமா உள்ளிட்ட 500 பேர் ரஷிய நாட்டிற்குள் நுழைய தடை!

சனி, 20 மே 2023 (23:43 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 பேரை ரஷிய நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு உக்ரைன் மீது அதிபர் புதின் தலைமையிலான ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டைத் தாண்டி போர் நடைபெற்று வரும்  நிலையில்  இன்னும் சமாதானம் எட்டப்படவில்லை.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேச நாடுகள் கூட்டமைப்புகள் நிதியுதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகின்றன.இதனால் உக்ரைன், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 பேரை ரஷிய நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், ''அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்குப் பதில் அளிக்கும் வகையில், 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோத நடவடிக்கைக்குக்கூட பதிலளிக்காமல் விடாது'' என்று  தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்