துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலை: அதிபர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (18:28 IST)
துருக்கியில் உள்ள 10 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். 
 
துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து இந்த பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டிடத்தின் இடைபாடுகளில் சிக்கி சுமார் 5000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்வதாக நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ 70 நாடுகள் முன்வந்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்