துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்... வைரலாகும் ட்வீட்

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:12 IST)
துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்... வைரலாகும் ட்வீட்
துருக்கி நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஆராய்ச்சியாளர் ஒருவரின் டுவிட் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் டச்சு நாட்டின் ஆராய்ச்சியாளர் ஒருவர் மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணித்து வரைபடத்துடன் கூடிய டுவிட்டை பதிவு செய்துள்ளார் 
 
அவரது டிவிட் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பறவைகள் அச்சத்துடன் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்