உலகின் பணக்கார பெண் மரணம்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (13:57 IST)
உலகின் பணக்கார பெண்ணான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லில்லியன் பெட்டன்கோர்ட் தனது 94-வது வயதில் நேற்று வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார்.


 
 
பெட்டன்கோர்ட்டின் குடும்பம் எல்.ஓரியல் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை. இந்த நிறுவனம் 33 சதவிகித பங்கு மதிப்பை தற்போது கொண்டுள்ளது.
 
சிறிய ஒரு நிறுவனமாகவே எல்.ஓரியல் நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. நாளடைவில் அந்த நிறுவனத்தை பல பில்லியன்களில் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றியது லில்லியன் பெட்டன்கோர்ட் என்ற இந்த பெண் தான். இவரது பங்கு இந்த நிறுவனத்துக்கு அளப்பறியது.
 
இந்த நிறுவனத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூபாய் 2902590 பில்லியன் கோடியாகும். ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும். கடந்த 2017-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் உலகின் முதல் பணக்காரப் பெண் என்ற பெருமையையும் லில்லியன் பெட்டன்கோர்ட் பெற்றார்.
 
அந்த பட்டியலில் ஒட்டு மொத்தமாக ஆண்களையும் சேர்த்து 14-வது பணக்காரர் என்ற பெருமையும் பெற்றார் இவர். இவரது நிறுவனத்தில் உலகம் முழுவதும் 89300 பேர் வரை பணிபுரிகின்றனர். 34 வகையான அழகு சாதனப் பொருட்களை இந்த நிறுவனம் தயாரிக்கின்றன. இந்நிலையில் 94 வயதான லில்லியன் பெட்டன்கோர்ட் நேற்று வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்