இஸ்லாமாபோபிக்: சமூக ஊடங்களில் இஸ்லமியத்திற்கு எதிராக பேச தடை!!

வியாழன், 21 செப்டம்பர் 2017 (17:12 IST)
சீனாவில் முஸ்லீம்களுக்கு எதிரான இஸ்லாமாபோபிக் எனப்படும் வார்த்தை இணையதளத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. 


 
 
சீனாவில் ஷின்சியாங் மற்றும் நிங்சியா மாகாணங்களில் 21 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். 
 
இந்நிலையில், இஸ்லாமாபோபிக் என்ற இஸ்லாமியத்திற்கு எதிரான வார்த்தை சமூக ஊடங்களில் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
 
இது முஸ்லீம் மக்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் அளித்த புகாரின் பெயரில் முஸ்லீம்களுக்கு எதிரான வார்த்தைகளை இணையதளங்களில் பயன்படுத்தக் கூடாது என சீன அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இதனால் இணையத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வார்த்தைகள் மற்றும் கிரீன் ரிலிஜியன், பீஸ் ரிலிஜியன் போன்ற வார்த்தைகளுக்கு விடை கிடைக்கவில்லை.
 
இதைத்தொடர்ந்து சீன மக்கள் அரசாங்கம் முஸ்லீம்களுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் அளித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்