மெக்சிகோ நிலநடுக்கத்தில் சிக்கி 32 மணி நேரமாக உயிருக்கு போராடி வரும் சிறுமி!

வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:42 IST)
மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 230 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க போராடி வருகின்றனர்.


 
 
7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
மேலும் பள்ளி ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் அதில் சிக்கியுள்ளனர். அதில் 12 வயதான சிறுமி ஒருவர் கடந்த 32 மணி நேரமாக உயிருக்கு போராடி வருகிறார். மீட்பு குழு நவீன கருவிகள் மூலம் அந்த சிறுமியை தொடர்பு கொண்டதில் சிறுமியின் பெயர் மற்றும் வயதை கேட்டுள்ளனர். மேலும் சிறுமியுடன் 2 பேர் சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் அசைவுகளை வைத்து அவரை மீட்க மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவருக்கு தண்ணீர் கொடுக்கவும் மீட்பு குழு முயற்சித்து வருகிறது. கடந்த 32 மணி நேரமாக சிறுமி உயிருக்கு போராடி வருவதால் சமூக வலைதளங்களி அவருக்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்