வேறு பெண்ணுடன் தொடர்பு ; கணவரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மனைவி

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (13:49 IST)
தனது கணவர் வேறு பெண்னை திருமணம் செய்ய திட்டமிடிருந்ததால், அவரின் ஆணுறுப்பை ஒரு பெண் வெட்டி எறிந்த விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இர்ஷாத் (27). இவர் குற்றிப்புரம் என்ற பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில், ஒரு பெண்ணுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
 
அந்நிலையில், லாட்ஜ் அறையிலிருந்து திடீரெனெ ரத்தம் சொட்ட சொட்ட இர்ஷாத் வெளியே ஓடி வந்தார். அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்  அவரை அருகிலிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது.
 
இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் ஏற்கனவே திருமனம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளவர் என்பதும், தற்போது இர்ஷாத்தை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. 
 
அந்நிலையில், வேறொரு பெண்ணுடன்  இர்ஷாத்திற்கு  தொடர்பு ஏற்பட்டதோடு, அவரை இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், அவரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்