’மாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவன்.’..காப்பாற்றிய பூனை .. வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (15:48 IST)
பொதுவாக இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்,வீட்டின் மேல் மாடியில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

 
அப்போது அந்த குழந்தை விளையாடிகொண்டு, மாடியின் விளிம்புக்கு வந்தது. அதைப் பார்த்த பூனை ஓடிச் சென்று, குழந்தையை பத்திரமாகக் காப்பாற்றியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்