கசகசா செடிகளை பயிரிட்டால் கொளுத்துவோம்! – தாலிபான் அரசு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:53 IST)
ஆப்கானிஸ்தானில் கசகசா செடிகளை பயிரிட கூடாது என தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அரசு அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் கசகசா பயிரிட தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. கசகசா பயிரிலிருந்து அபின் போன்ற போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கசகசா பயிரிட்டால் வயல்கள் கொளுத்தப்படும் என தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்