அமெரிக்காவில் நிர்மலா சீதாராமனை சந்தித்த இலங்கை அமைச்சர்: முக்கிய பேச்சுவார்த்தை

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:54 IST)
அமெரிக்காவில் நிர்மலா சீதாராமனை சந்தித்த இலங்கை அமைச்சர்: முக்கிய பேச்சுவார்த்தை
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்று இருக்கும் நிலையில் அங்கு இலங்கை நிதி அமைச்சர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்க இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை நிதியமைச்சர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
இலங்கை பொருளாதாரம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் இலங்கைக்கு உதவி செய்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்