தினம்தோறும் கொரோனா தகவல்களை அளியுங்கள்! – கேரளாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:50 IST)
கேரள அரசு 5 நாட்களுக்கான கொரோனா பாதிப்பு தகவல்களை ஒரே நாளில் சேர்ந்து அனுப்பியது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநில அரசுகள் தினம்தோறும் கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றன.

இந்நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு தகவல்களை அனுப்பிய கேரளா அரசு 24 மணி நேரத்தில் 213 பேர் பலியானதாக தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த 5 நாட்களின் தரவுகளை சேர்த்து நேற்று கேரள அரசு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கேரள அரசுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பிய மத்திய சுகாதாரத்துறை, கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி குறித்த தகவல்களை தினம்தோறும் அனுப்பினால்தான், பாதிப்பின் வீரியத்தை வைத்து முக்கியமான முடிவுகள் எடுக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்