சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவர் மீது வழக்குப்பதிவு..!

Mahendran
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (16:31 IST)
பிரான்ஸ் நாட்டில் சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அறுவை சிகிச்சை மருத்துவருக்கு எதிராக திடீரென பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது, 300க்கும் அதிகமான பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
 
இந்த 300 பேரில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்பதும் பெரும் அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. இது குறித்த வழக்கு ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
 
மருத்துவரிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் அனுபவித்த மனவேதனையை ஆற்ற முடியாது என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார்.
 
இந்த நிலையில், விசாரணை தொடங்கிய முதல் நாளிலேயே, நீதிமன்றத்தில் பேசிய மருத்துவர், "நான் மிகவும் அருவருக்கத்தக்க செயல்களை செய்துள்ளேன். எனக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள்" என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விவகாரத்தில்,  மருத்துவருக்கு மிக அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்