புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமான நிலையில், கூரியர் மூலம் சில பரிசு பொருட்களை அனுப்புவதாக அந்த வாலிபர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள், அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சுங்கத்துறை அதிகாரி ஒருவர், "உங்களுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசு பொருட்கள் வந்திருக்கின்றன. அவற்றை பெற டெலிவரி கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்காக 16 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த இளம் பெண், 16 லட்சம் ரூபாய் அனுப்பிய நிலையில், பரிசு பொருள் எதுவும் வந்து சேரவில்லை. இதன் பின்னர் தான், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததை அவர் உணர்ந்தார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் பழகும் நண்பர்கள் பரிசு பொருட்களை அனுப்பினால், அதை ஒப்புக்கொள்ள வேண்டாம். அப்படியே அனுப்பினாலும், எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.