திண்ணு திண்ணு கொழுத்த பெருச்சாளி இம்ரான் கான்: மரியம் நவாஸ் விமர்சனம்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (11:24 IST)
பாகிஸ்தானின் கோதுமை, சர்க்கரை, நெய் எல்லாம் உண்டு கொழுத்த பெருச்சாளி இம்ரான் கான் என விமர்சித்துள்ளார் மரியம் நவாஸ். 

 
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றிற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் திறமையற்ற ஆட்சியே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இம்ரான் கானின் சொந்த கட்சியினரே சிலர் அவருக்கு எதிராக மாறியுள்ளனர்.
 
இதனால் அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 342 இடங்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க 172 உறுப்பினர்கள் தேவை. ஆனால் இம்ரான் கான் கட்சியில் 155 உறுப்பினர்களே உள்ள நிலையில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாகவும், சில நாடுகள் மறைமுகமாக எதிர்கட்சிகள் மூலமாக தனது அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபடுவதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து நவாஸ் மனைவியான மரியம் நவாஸ் பாகிஸ்தானின் கோதுமை, சர்க்கரை, நெய் எல்லாம் உண்டு கொழுத்த பெருச்சாளி இம்ரான் கான் என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்