கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல் துலக்கிய பின், பற்களையும், ஈறுகளையும் கடுக்காய் தூள் கொண்டு மசாஜ் செய்து, நன்றாக மசாஜ் செய்த பின் ஒரு நிமிடம் கழித்து வாய் கொப்புளித்து வர பல் சார்ந்த பிரச்சனைகள் வராது.
10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் சருமத்தை சுத்தப்படுத்தும். உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.