முந்தைய அரசின் கீழ் டெல்லியின் வளர்ச்சி பின்னடைவு கண்டது, யமுனை ஆற்றின் மாசு தாண்டிய அளவிற்கு அதிகரித்தது, சாலைகள் சேதமடைந்தன, காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது, மேலும் நகர நிர்வாகம் நிதி பற்றாக்குறையில் இருந்தது. ஆனால், பாஜக அரசு 10 முக்கிய துறைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளது, குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாடு, மின்சாரம், குடிநீர், சாலை வசதி அபிவிருத்தியில் கவனம் செலுத்தியுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை தரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா" திட்டத்திற்கு ரூ. 2,144 கோடி, 100 "அடல் கேன்டீன்கள்" அமைப்பிற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு, பொது போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி நிதியுதவி என்ற அறிவிப்புகளையும் முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.