சென்னையில் காலை ஒரு மணி நேரத்திற்குள் பல இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீஸார் பிடித்துள்ளனர்.
சென்னையின் திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி என பல பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 8க்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தமாக 15 சவரனுக்கும் மேல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து பகுதி போலீஸாரும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் விமான நிலையம் நோக்கி சென்றதை கண்டுபிடித்துள்ளனர். விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு அவர்கள் தயாராக இருந்தபோது 2 கொள்ளையர்களையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தனர்? கொள்ளையை திட்டமிட்டது எப்படி? என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K