அரண்மணைக்கு வந்த ராணியின் உடல்.. மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (09:02 IST)
ஸ்காட்லாந்து கொண்டு செல்லப்பட்ட ராணி எலிசபெத் உடல் மீண்டும் இங்கிலாந்து கொண்டு வரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் மூலமாக சவப்பெட்டி கொண்டு வரப்பட்டது.

ALSO READ: ஜி20 நாடுகளுக்கு தலைவராகும் இந்தியா… அடுத்த ஆண்டு மாநாடு!

இன்று பிற்பகல் ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இன்று மாலை முதல் இறுதி சடங்கு நடைபெறும் 19ம் தேதி முதல் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்