பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 28 மார்ச் 2025 (12:22 IST)
பிஎஃப் பணத்தில் இருந்து  ரூ.1 லட்சம் வரை இனி யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி மே மாத இறுதிக்குள் நடைமுறையில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் துறை 
 
தொழிலாளர்களுக்கு அவசரத் தேவைக்காக பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.
 
மேலும், பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகை எவ்வளவு என்பதை யுபிஐ மூலம் பார்த்து கொள்ளலாம் என்றும், அதில் இருந்து தேவையான தொகையை விருப்பமான வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதியும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தை அவசர தேவைக்காக எடுக்க கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். ஆனால், இனி யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதி வந்தவுடன், அவர்கள் விரைவாகவே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய ஏற்பாடு மூலம் ஒரு மணி நேரத்துக்குள் பணத்தை எடுக்கும் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்