இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) முதுமையால் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும், மக்களும் அஞ்சலியும் இரங்களும் தெரிவித்தனர்.
அவரது உடல் கடந்த 11 ஆம் தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லபப்ட்டு, எடின்பர்க்கில் உள்ள ஹோலிவுட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. நேற்று செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட வழிபாடு நடத்தப்பட்டது.