வங்கி ஏ.டி.எம். கார்டில் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (13:01 IST)
இங்கிலாந்தில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில், விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
இங்கிலாந்தில் செயல்படும் பார்கிளேஸ் வங்கியின் டெபிட் கார்டில், தாங்கள் விரும்புவர்களின் புகைப்படத்தை அச்சிட்டுக் கொள்ளும் வசதி உள்ளது. 
 
இதனையடுத்து இங்கிலாந்து வாழ் தமிழர்கள், தங்களுக்கு பிடித்தமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை அச்சிட்டு பெற்றுள்ளனர்.
 
இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டாலும், மறுபுறம் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்