எலி ஸ்ப்ரேவை செண்ட் என அடித்து விளையாடிய சிறுவர்கள்! புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (13:25 IST)

புதுக்கோட்டையில் வாசனை திரவியம் என நினைத்து எலி ஸ்ப்ரேவை வைத்து விளையாடிய சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ரிஷிகேஸ் (6), ரித்திக் (6), கருப்பசாமி (5), தனபிரியன் (5) ஆகிய நான்கு சிறுவர்கள் பள்ளி முடிந்து ஒரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 

 

அப்போது அப்பகுதியில் கிடந்த எலி ஸ்ப்ரே ஒன்றை எடுத்து அவர்கள் விளையாடியுள்ளனர். ஸ்ப்ரேவை முகத்திலும் வாயிலும் அடித்து அவர்கள் விளையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக சிறுவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

 

தற்போது சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எலி விஷம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஒருவாரம் சிறுவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வயிற்றுக்குள் எலிவிஷம் சென்றிருந்தால் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறுவர்கள் கைகளில் இந்த பொருட்கள் கிடைக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்