இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்? மக்கள் அச்சம்

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (08:38 IST)
இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்? மக்கள் அச்சம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு கிட்டத்தட்ட திவாலாகி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இலங்கையை அடுத்து பாகிஸ்தான் நாடும் திவாலாகும் நிலையில் இருப்பதாக அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 
இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 30 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் 210 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் மக்கள் பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டதை கண்டித்து வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
 முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்