மாறி மாறி தாக்குதல் நடத்தும் ஈரான் - பாகிஸ்தான்: போர் மூளுமா?

Mahendran
வியாழன், 18 ஜனவரி 2024 (11:42 IST)
ஈரான், பாகிஸ்தான் நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகள் இடையிலான மோதல்கள் தற்போது தீவிரமடைந்து வருவதாகவும் இதனால் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது,
 
 ஜனவரி 13ஆம் தேதி, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, பாகிஸ்தான் இராணுவ தளம் ஒன்றை ஈரான்  தாக்கியதாகவும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
 
இந்நிலையில் இந்த இரண்டு தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த மோதலுக்கு பின்னணியில் பல காரணிகள் உள்ளதாகவும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிற்து. மேலும், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்து வருவதால், பாகிஸ்தான் அச்சுறுத்தலாக உணர்கிறது.
 
இந்த மோதல் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்த மோதல் உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக் கூடாது என உலக நாடுகளின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்