எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு.!! காரணம் என்ன? இந்திய ராணுவம் விளக்கம்!!

Senthil Velan

செவ்வாய், 16 ஜனவரி 2024 (19:11 IST)
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வழக்கமான அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஒவ்வொரு குடியரசு தினத்தை முன்னிட்டும், 10 நாள்களுக்கு முன்பே, ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு.! 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்..!!
 
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருப்பதால், அசம்பாவிதங்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் நாடு முழுவதும் உள்ள பதற்றமான பகுதிகளை இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து  கண்காணித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்