கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்..!

Mahendran

புதன், 17 ஜனவரி 2024 (12:25 IST)
பாகிஸ்தான் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளதை அடுத்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் ஈரான் நாட்டிற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 
 
 பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சி படை திடீரென ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிர் இழந்ததாகவும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது தொடர்ந்தால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
மேலும் ஈரான் பொறுப்பாளரை வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைத்து கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்