மூன்று வகையாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:52 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பரவியுள்ள நிலையில் தற்போது அது மூன்று வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று மூன்று வகையாக பரவத் தொடங்கியுள்ளதாக ஒமிக்ரானை ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒமிக்ரான் பிஏ1, பிஏ2 மற்றும் பிஏ3 என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பிஏ1 வீரியமிக்கதாகவும், வேகமாக பரவுவதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் பரவலால் டெல்டாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்