ஆனால் இப்போது ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவல் அலை மீண்டும் எழும்ப தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்துவதில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி பாதிப்பு ஏற்பட்டால் கடந்த ஆண்டுகளை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.