ஊசி மருந்துக்கு பதிலாக குழாய் தண்ணீரை செலுத்திய நர்ஸ்.. 10 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:52 IST)
அமெரிக்காவில் ஊசி மருந்துகளை கள்ளத்தனமாக விற்பனை செய்துவிட்டு நோயாளிகளுக்கு குழாய் தண்ணீரை பிடித்து ஊசியில் செலுத்தியதால் 10 பேர் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் ஓரேகான் என்ற மாகாணத்தில் நர்ஸ் ஒருவர் நோயாளிகளுக்கு வலி மருந்துக்கு  பதிலாக குழாய் தண்ணீரை ஊசி மூலம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இது குறித்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சென்று சோதனை செய்ததில் மருந்துகள் அனைத்தையும் அந்த செவிலியர் திருடி கள்ளத்தனமாக விற்பனை செய்து உள்ளார். எனவே வரும் நோயாளிகளுக்கு மருந்துகளுக்கு பதிலாக குழாய் தண்ணீரை பிடித்து அதை செலுத்தி உள்ளார். இதனால் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
 
இதனை அடுத்து மருத்துவ நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்