தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

Prasanth Karthick

திங்கள், 30 டிசம்பர் 2024 (17:51 IST)

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து இன்று காலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைப்பட எழுதி வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சரியாக வைத்திருக்க வேண்டி விஜய் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

 

முன்னதாக விஜய் வெளியிட்ட அறிக்கையை அச்சடித்து விநியோகித்ததற்காக தவெக தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆளுனர் இல்லம் சென்று திரும்பிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கைதான தொண்டர்களை பார்க்க சென்றபோது அவரும் கைது செய்யப்பட்டார். 
 

ALSO READ: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

 

இது தவெக தொண்டர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆனந்த் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மேலும் சில தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தவெக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீண்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து தொடரும் தவெக கைது படலங்களால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் என்ன சொல்ல போகிறார் என அவரது தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்