கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மின்சார ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யபிரியாவை கொலை செய்த சதீஷ் குற்றவாளி என சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று சதீஷ்க்கான தண்டனை குறித்த விவரத்தை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சதீஷ், சத்ய பிரியா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், சதீஷின் நடவடிக்கை பிடிக்காததால் அவர் பிரிய சத்யா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.