ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் காரில் வேகமாக செல்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய முடிவு செய்தனர். அப்போது அவர்கள் காரை ஓட்டிக் கொண்டே வீடியோ எடுத்த போது ரோட்டை கடந்து சென்ற தாய் மகன் ஆகிய இருவர் மீது கார் வேகமாக மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிர் இழந்தனர்.