சுற்றுசூழல் தினத்துல இப்படி ஒரு சம்பவமா? நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (11:16 IST)
உலக சுற்றுசூழல் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் நார்வேயில் ஒரு தெருவே கடலுக்குள் மூழ்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

உலகம் வெப்பமயமாதலையும், சுற்றுசூழலை, இயற்கையை பேணி காப்பதையும் வலியுறுத்தும் வகையில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக உலகம் பல்வேறு பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நார்வேயில் நடந்த ஒரு பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டின் ஆல்டா கடற்கரை பகுதியருகே பல குடியிருப்புகள் உள்ளன. வழக்கம் போல மக்கள் தங்கள் அன்றாட வேளைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் நிலப்பகுதி எந்த அதிர்ச்சியும் இல்லாமல் கடலை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்திலேயே கடலை நோக்கி சரிய தொடங்கிய நிலப்பரப்பு நிமிடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கியது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த கோர விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

8 வீடுகள், அந்த வீடுகளில் வசித்தவர்கள் உடமைகள் கடலில் மூழ்கிய நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மற்ற மக்களும் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்