ஒப்பந்தத்தை மீறி குண்டு மழை பொழியும் ரஷ்யா! – சிரியாவில் பதற்றம்!

வெள்ளி, 5 ஜூன் 2020 (08:05 IST)
சிரியாவில் கிளர்ச்சியாளர்களோடு பல ஆண்டுகளாக யுத்தம் நடந்து வரும் நிலையில் தற்போது அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ளது, இந்நிலையில் ரஷ்யா குண்டு மழை பொழிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிபர் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முடிவுறாத யுத்தம் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த யுத்தத்தால் பல சிரிய மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் சிதறியுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி உள்நாட்டு போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்ய விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்