உலக கொரோனா தொற்று: 17 கோடியை நெருங்கியதால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (06:46 IST)
உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 கோடியை நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் உலக சுகாதார மையம் அளித்த தகவலின்படி உலகம் முழுவதும் 16,812,755 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
உலகில் கொரோனா தொற்றால் 6,62,095 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்பதும், நேற்று ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,634,870 என்பதும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 155,284 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,613,789என்பதும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 91,377என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 775  பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 52123 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்