தற்போது சில நாடுகளில் உள்ளூர் விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட கொரோனா பாதிப்புகள் மோசமடைந்ததை தொடர்ந்து சகஜநிலை திரும்ப மேலும் நாட்களாகும் என தெரிகிறது. 2023க்குள் விமானசேவை சகஜநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு 2024 வரை ஆகலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது.