அசால்ட்டாய் தப்பிய பூமி: கடந்து போனது ஆபத்தான விண்கற்கள்!!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (15:16 IST)
பூமியை கடக்க இருந்த ஆபத்தான விண்கற்கள் பூமிக்கு எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றுள்ளதாம். 
 
வான்வெளியில் சூரியன், கோள்கள், நட்சத்திரங்களை தவித்து விண்கற்களும் ஒரு அங்கமாய் உள்ளது. இந்த விண்கற்கள் சூரியனையோ அல்லது வேறு சில கோள்களையோ சுற்றி வந்து கொண்டிருக்கும். 
 
ஆனால், இந்த விண்கற்கல் பூமியின் அருகே வரும் போது, ஈர்ப்பு விசை காரணமாக உள்ளிழுக்கப்பட்டு பூமிக்குள் விழும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு பூமிக்குள் விழும் போது சில அசாம்பாவிதங்களும் நடக்கூடும். 
அந்த வகையில், 2019 OD, 2015 HM10, 2019 OE ஆகிய விண்கற்கள் நேற்று பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா எச்சரித்திருந்தது. குறிப்பாக 2019 OD விண்கல் நிலவைவிட பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என கூறப்பட்டிருந்தது. 
 
அதேபோல் நெருக்கமான இடைவெளியில் இந்த விண்கற்கள் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்