220+ டேட்டிங்... ஒருத்தனும் செய்யாததை செய்த நாய்: கவிழ்ந்த மாடல் அழகி!!

வியாழன், 25 ஜூலை 2019 (10:30 IST)
இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நாயை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
 
இங்கிலாந்தில் கிழக்கு எஸ்காட் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ஹோட் என்ற பெண் பிரபல டிவி சேனனில் மாடலாக உள்ளார். இவர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தனது செல்லப்பிராணியான நாயை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
எலிசபெத் நாயை திருமணம் செய்வோம் என இந்த முடிவு எடுத்தற்கு பின்னணியில் காரணம் ஒன்றும் உள்ளதாம். இது குறித்து அவர் கூறியதாவது, இதற்கு முன்னர் நான் 220-க்கும் அதிகமான ஆண்களுடன் பழகியுள்ளே. டேட்டிங் செய்துள்ளேன். அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. 
மேலும், எனக்கு இரண்டு முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு ரத்தானது. அதோடு ஆண்கள் யாரும் உறுதுணையாக இருந்தது இல்லை. எனவே நான் அவர்களை நம்புவதும் இல்லை. ஆனால், எனது லோகன் (நாயின் பெயர்) எனக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும் உள்ளது. இதனால் நான் லோகனையே திருமணம் செய்ய உள்ளேன் என கூறியுள்ளார். 
 
எலிசபெத்தின் உறவினர்களுக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லாத போதும், இந்த முடிவை மாற்றிக்கொள்வதாய் அவர் இல்லை. இந்த திருமணம் பைத்தியகாரத்தனம் என எலிசபெத்தின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்