வங்கக் கடலில் தோன்றியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் விடுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை தற்போது பார்ப்போம்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
அத்துடன் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.