ஆப்ரிக்கா நாட்டின் காங்கோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு சென்று கொண்டிருந்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே கப்பலை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் பேரதிர்ச்சியில் மூழ்கினர். அந்த கப்பலில் மரங்கள் வைக்கப்பட்டிருப்பதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு, மூன்று கண்டெயினர்களில், 300 யானைகளின் தந்தங்கள் கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தந்தங்களின் சர்வதேச மதிப்பு சுமார் 90 கோடி என கூறப்படுகிறது.
மேலும் அந்த தந்தங்களுடன், கிட்டத்தட்ட 2000 எறும்புத்தின்னிகள் கொல்லப்பட்டு அவற்றின் செதில்களும் 12 டன் அளவிற்கு கடத்தப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு சுமார் 250 கோடி என கூறப்படுகிறது. இந்த கடத்தல் பொருட்களை குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சீனர்களின் கவுரவத்திற்காகவும், கறிக்காகவும், அழகு சாதன பொருட்களுக்காகவும் யானை தந்தங்களையும், எறும்புத்தின்னியின் செதில்களையும், வியட்நாம் கொண்டு சென்று, அங்கிருந்து சீனாவிற்கு விற்கப்படுவதாக தெரியவந்தது. இதற்காக ஆப்ரிக்கா காடுகளில் நாளொன்றுக்கு 55 யானைகள் கொள்ளப்படுவதாக கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.