3 வயது குழந்தையை நீச்சள் குளத்தில் கொலை செய்த தந்தை : அதிர்ச்சி வீடியோ

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (12:19 IST)
மூன்று வயது குழந்தையை நீச்சல் குளத்தில் பலமுறை தூக்கி விசி கொடூரமாக கொலை செய்த நபருக்கு மெக்சிகோவில் 100 வருடம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
மெக்சிகோவில் வசிக்கும் ஜோஸ்டேவிட் என்பவர் சமீபத்தில் ஒரு பெண்னை திருமணம் செய்தார். அந்த பெண் ஏற்கனவே திருமனமானவர். அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் உண்டு. ஆனால், முதல் கணவரிடமிருந்து விலகி டேவிட்டை திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் மெக்சிகோவில் உள்ள ஹோட்டலுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அந்த குழந்தையின் தாய் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். டேவிட் அந்த குழந்தையை நீச்சள் குளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதில் அக்குழந்தையை பலமுறை தூக்கி வீசியுள்ளார். அந்த குழந்தை தண்ணீரில் தத்தளித்தும், அவரின் மனம் இறங்கவில்லை. ஒரு கட்டத்தில், அக்குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றே விட்டார்.
 
இவையெல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவருக்கு 40 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை பார்த்து கோபமடைந்த நீதிபதி, அவருக்கு 100 வருடங்கள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
 
அடுத்த கட்டுரையில்