மோடி குறித்து சர்ச்சை பேச்சு.. மாலத்தீவு அதிபரின் பதவிக்கே ஆபத்து.. உலக நாடுகள் ஆச்சரியம்..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:30 IST)
பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாலத்தீவு அதிபருக்கே எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது.  

மாலத்தீவு அதிபராக  முய்சு என்பவர் பதவி ஏற்றதிலிருந்து அவர் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்தியாவை சார்ந்து தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளையும் வருமானம் தான் மாலத்தீவுக்கு மிகப்பெரிய வருமானம்.

ALSO READ: 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அவ்வாறு இருக்கையில் இந்தியாவையும் இந்திய பிரதமரையும் அவமதித்து பேசியது மிகவும் தவறு என்றும் கூறி வருகின்றனர் முய்சு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருவதால் அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. இந்திய பிரதமரை பற்றி தவறாக பேசினால்  பதவிக்கே ஆபத்து என்ற நிலையை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்