இந்தியா எங்களை குறிவைக்கிறது.. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்..!

Mahendran

ஞாயிறு, 7 ஜனவரி 2024 (16:33 IST)
பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் மாலத்தீவுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் இந்தியா எங்களை குறிவைக்கிறது என்று மாலத்தீவு அதிபர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருந்து அதிக அளவு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கும் நிலையில் மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம் என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்துவதற்காக தான் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றதாக கூறப்பட்டது. இதனால் பலரும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டு லட்சத்தீவு செல்வதாக புறப்படுகிறது.

இந்த நிலையில் மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது சமூகவலைதள பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது, மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்