10ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் சிலை! – மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (11:27 IST)
இந்தியாவிலிருந்து லண்டனுக்கு திருடி செல்லப்பட்ட பழமைவாய்ந்த சிவன் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது லண்டன்.

இந்தியாவிலிருந்து பழம்பெரும் கடவுள் சிலைகள் பல வெளிநாடுகளுக்கு முந்தைய காலங்களில் கடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது அதில் பல சிலைகள் மீண்டும் இந்தியாவிற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் சிலை ஒன்றை இந்திய தொல்லியல் துறையிடம் லண்டன் அரசு அளிக்க உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரோலியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 1998ம் ஆண்டில் திருடப்பட்ட இந்த சிலை லண்டனில் உள்ள ஒரு தனி நபரால் வாங்கப்பட்டுள்ளது.

இந்த சிலையினை மீட்பது குறித்து லண்டன் அரசுடன் 2003ம் ஆண்டிலேயே இந்திய தொல்லியல் துறை பேச்சு வார்த்தை நடத்தியிருந்த நிலையில், அதை வாங்கிய தனிநபர் சிலையை அரசிடம் 2005ல் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்