47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்ட ஐபோன்...

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (15:23 IST)
ஆப்பிள் தயாரிக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் பாதுகாப்பு அம்சம் சிறப்பானதாக இருக்கும். அதேபோல், மென்பொருள் அல்லது வன்பொருள் மூலம் ஐபோன்களை ஹேக் செய்ய விடாமல் பார்த்து கொள்ளும்.
 
ஐபோன்களில் 6 முறைக்கு மேல் தவறான பாஸ்வோர்டை பதிவு செய்தால் ஐபோன் டிசேபிள் செய்யப்படும், 10 முறை தவறாக பதிவிட்டால் ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.
 
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் ஐபோன் ஒன்று 47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்டுள்ளது. ஆம், 2 வயது குழந்தை தனது தாயின் ஐபோன் வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது தொடர்ச்சியாக தவறான பாஸ்வோட்டை பதிவு செய்ததால் ஐபோன் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆகியுள்ளது. 
 
இதற்கு முன்னர் இதே போன்று 80 ஆண்டுகளுக்கு ஐபோன் லாக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையை தீர்ப்பது கடினம் என்று ஐபோன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்